தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர்...
ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர், அதனை அழிப்பதற்காக, தாமே பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, அமைந்துள்ள கடையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, பிளாஸ்டிக் கப், கேரி பேக், ஒரு முறை பயன்படுத்தப்படும் பேப்பர் கப் போன்றவற்றை தானே அகற்றினார். இதனையடுத்து அதனை குப்பையில் போட சொன்ன ஆட்சியர், திடீரென்று அதனை தாமே 200 ரூபாய் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் கேட்டதற்கு, கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற மாட்டார்கள். இதனால் தாம் விலைக்கு வாங்கி அதனை அழித்துவிடுவதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார்.
Next Story