கடலூர் பேருந்து நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை....
கடலூர் பேருந்து நிலைய கடைகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* கடலூர் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி தட்சணாமூர்த்தி தலைமையில் அதிகாரிகள், குளிர்பான கடைகள், உணவகங்கள், ஸ்வீட் ஸ்டால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
* அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், அழுகிய நிலையில் இருந்த பழவகைகள், லேபில் இல்லாத பொருட்கள், பயன்பாட்டு காலம் குறிப்பிடாத பொருட்கள் மற்றும் காலாவதியான தின்பண்டங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.
* மேலும் கடை உரிமையாளர்களுக்கு இது போன்ற பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story