விழுப்புரத்தில் ஒன்றரை டன் குட்கா பறிமுதல்
விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒன்றரை டன் குட்கா பொருட்கள் சிக்கின.
விழுப்புரம் சாலமேடு பகுதியில், குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் வரலட்சுமி தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள சீனிவாசா நகரில் நாராயண் ராம் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து குட்கா, பான்மசாலா, ஹன்ஸ் என ஒன்றரை டன் எடையிலான புகையிலை பொருட்கள் சிக்கின. இதுகுறித்து நடந்த விசாரணையில், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விழுப்புரத்தில் நாராயண் ராம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதலான குட்காவில் சில பாக்கெட்டுகளை சோதனைக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர். அதன் மொத்த மதிப்பு 10 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்டத்தில் குட்கா பொருட்களை விற்றால் குண்டர் சட்டம் பாயும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Next Story