கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற 411 விசைப்படகுகளில் 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற
411 விசைப்படகுகளில், 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள 176 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அவர்கள் கரை திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய இடங்களை தங்கு தளமாக கொண்டு சென்ற 235 படகுகளில், 100 படகுகள் கரை திரும்பி உள்ளது என்றும், 66 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தெரியாமல் 89 படகுகளில் 801 மீனவர்கள் கடலில் இருப்பதாகவும், அவர்களுக்கு ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ கப்பல் சேட்லைட் போன் மற்றும் ஆழ்கடல் வழியாக செல்லும் தனியார் கப்பல்கள் மூலமும் தகவல் அளித்து கரைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story