5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேட்டராய பெருமாள் கோயிலின் சிறப்பு

ஒசூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பேட்டராய பெருமாள் கோயிலின் சிறப்பு
5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேட்டராய பெருமாள் கோயிலின் சிறப்பு
x
ஒசூர் அருகே தேன்கனிக் கோட்டையில் இருக்கிறது பேட்டராய சுவாமி கோயில். 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் என்பதே இதன் அடையாளம். 

அத்ரி மகரிஷி மற்றும் கன்வ மகரிஷி ஆகியோர் யாகம் நடத்தும் போது அதை கலைக்கும் எண்ணத்தோடு புலித்தோற்றத்தில் வருகிறார் யட்சன். இதைப் பார்த்த மகரிஷிகள் புலியை விரட்ட பெருமாளை அழைக்கின்றனர். அப்போது திருப்பதியில் இருந்து வேட்டையன் வடிவத்தில் வருகிறார் பெருமாள். புலியாக நின்ற யட்சனின் தலையில் பெருமாள் தான் வைத்திருந்த ஆயுதம் கொண்டு அடிக்க யட்சன் புலி தோற்றத்தை விடுத்து பழைய நிலையை அடைகிறார். இதன்பிறகு பெருமாளே இத்தலத்தில் அருள்பாலித்ததாக வரலாறு கூறுகிறது. 

சவுந்தர்யவள்ளி தாயாருடன் பேட்டராய பெருமாள் சுவாமி அழகிய திருமேனி கொண்டு அருள்பாலித்து வருகிறார். 700 ஆண்டுகளுக்கு முன் மன்னர்களால் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டதாகவும் கோயிலின் வரலாறு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். கோயிலின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் அத்ரி மற்றும் கன்வ மகிரிஷிகளுக்கு இந்த கோயிலில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோயிலில் வேண்டினால் வேண்டும் வரங்கள் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆண்டு தோறும் புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி கோயிலின் தேரோட்ட நிகழ்ச்சிகள் உட்பட எல்லா விழாக்களுமே கிட்டத்தட்ட திருவிழாக் கோலமாகவே காட்சி தருகிறது.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களுக்கும் அருகாமையான பகுதி என்பதால் இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வேட்டையனாக வந்த பேட்டராய பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். 


Next Story

மேலும் செய்திகள்