கனமழை எச்சரிக்கை : தயார் நிலையில் ஆட்சியர்கள் - வருவாய்துறை ஆணையர் சத்யகோபால்
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்
* சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரத்து 275 போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
* கடலோர மாவட்டங்களில் 60 முதல் 80 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 40 முதல் 50 போலீசாருக்கும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
* வட்டாட்சியர் அல்லது உதவி ஆட்சியர் தலைமையில் 692 பல துறை அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக கண்டறியப்பட்ட இடங்களில் நாளை மறுநாள் பணியை தொடங்குவார்கள் எனவும் சத்யகோபால் தெரிவித்தார்.
* தென்மேற்கு பருவமழை பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சத்ய கோபால் தெரிவித்தார்.
* எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ள, தயார் நிலையில் இருக்குமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story