ஆளுநர் கிரண்பேடி மீது அதிமுக எம்.எல்.ஏக்கள் உரிமை மீறல் புகார்
அரசு விழாவில் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனை பேச விடாமல் தடுத்ததாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு விழாவில் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனை பேச விடாமல் தடுத்ததாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில், எம்எல்ஏக்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசானா ஆகிய 4 பேரும், சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து கிரண்பேடி மீது புகார் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட சபாநாயகர் இது தொடர்பாக, ஆய்வு செய்து உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story