ஜனவரி -9, 'வெளிநாடு வாழ் இந்தியர் தினம்'
மகாத்மா காந்தி குறித்த அரிய தகவல்களைப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
காந்தி, இந்தியா திரும்பிய நிகழ்வு, 'வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக', ஜனவரி 9ஆம்தேதி, கொண்டாடப்படுகிறது... அவர், இந்தியா திரும்பிய போது, திறந்த வெளி வாகனத்தில், உற்சாக வரவேற்பு தரப்பட்டது, வரலாற்று நிகழ்வாக, கருதப்படுகிறது.முதன்முதலில், `தேசத் தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்..காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்' குஜராத்தி, ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது... தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர் `ஹரிஜன்'...
`உடற் பயிற்சியின் அரசன், நடைப் பயிற்சி'
`செய் அல்லது செத்து மடி...' - காந்தி முழக்கம்
`உண்மையே கடவுள்' - உச்சரித்த காந்தி...
`உடற் பயிற்சியின் அரசன், நடைப் பயிற்சி' என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது, ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று படித்தார்...
'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் போது, காந்தி சொன்ன வாக்கியம் தான்..... `செய் அல்லது செத்து மடி...'ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்' என்று சொல்லிவந்தார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது, `உண்மையே கடவுள்' என்று உச்சரித்தார். யாருக்கு கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்' என்று எழுதி, கடிதத்தை முடிப்பார்.கிழிந்த துணிகளைத் தானே தைப்பார். எவ்வளவு தான் வறுமையில் இருந்தாலும், உடுத்தும் உடை மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை, அவரும் கடைப்பிடித்தார்...
ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாக மலர்ந்தது.'சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்' என்று ஆங்கிலேயர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தமது 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தைக் கைவிடுவதாக கூறினார்.அதில், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக் கொள்வதற்கான உரிமம் வழங்குதல்' என்ற ஷரத்தும் இருந்தது.
தமது தவறுக்கு மவுன விரதம்...பிறரது தவறுக்கு உண்ணாவிரதம்..தாம் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும், பிறர் தவறு செய்தால், அதனை உணர தாம் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டு இருந்தார். இந்த குணம், அவர் தாயிடம் இருந்து வந்ததாகும்...
காந்திக்கு தபால் தலை வெளியிட்டது அமெரிக்கா
காந்திக்கு கிடைக்காத நோபல் பரிசு...
சுதந்திரத்தை கொண்டாட மறுத்தார் காந்தி...
இந்தியாவுக்கு வெளியே, முதன்முதலில் காந்தியின் தபால் தலையை அமெரிக்கா வெளியிட்டது. அவர் தமது வாழ்நாளில் சென்றிராத நாடு அமெரிக்கா தான். இது நடந்தது 1961 ஜனவரி 26-ம் தேதியில்.மார்டின் லூதர்கிங், தலாய் லாமா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை.இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அதைக் கொண்டாட காந்தி மறுத்துவிட்டார். `கனவில் இருந்து நிஜத்திற்கு... இருளில் இருந்து வெளிச்சத்திற்கு... மரணத்தில் இருந்து அமரத்துவத்திற்கு...' - காந்தி நினைவு மண்டபத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வாசகம் இது தான்...
Next Story