தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்டோகார்பன் எடுக்க முடிவு - தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்து
நாடு முழுவதும் 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் மற்றும் ஒ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நடந்தது. இதில் வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதன்படி இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2 தனியார் நிறுவனங்கள், 4 அரசு நிறுவனங்கள் என மொத்தம் 6 நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் 55 இடங்களில் 41 இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 இடங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு இடம் ஓஎன்ஜிசிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலப்பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கதான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 இடங்களும் கடற்பகுதியில் இருப்பதால் பிரச்சினை இருக்காது. காவிரி அருகே உள்ள கடற்பகுதியில் இருந்து தான் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும்.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குழப்பம்
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 3 இடமும் கடற்பகுதியில் இருப்பதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசின் ஆவணத்தில் ஒரு இடம் நிலப்பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
Next Story