விவசாய பயன்பாட்டிற்கு முதல் முறையாக டிரோன் அறிமுகம்
நீலகிரியில் முதன் முறையாக விவசாய பயன்பாட்டிற்கான டிரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் முதன் முறையாக விவசாய பயன்பாட்டிற்கான டிரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குன்னூரில் தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 125 வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் வாசனை திரவியங்கள் மற்றும் தோட்ட பயிர்களுக்கு தேவையான நவீன இயந்திரங்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் விவசாய நிலங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க உதவும் வகையில், முதல் முறையாக டிரோன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிரோன் மூலம் ஒரு நாளுக்கு 50 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களுக்கு 25 லிட்டர் வரை பூச்சி மருந்து தெளிக்க முடியும் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story