"சான்றிதழ்களை தர ரூ8 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்" - வேளாண் கல்லூரி நிர்வாகம் மீது புகார்
கல்லூரி நிர்வாகம் 8 லட்சம் ரூபாய் கேட்பதாக, மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள நாளந்தா வேளாண் கல்லூரியில், படித்து வரும் மனோஜ்குமார் என்ற மாணவரின் சான்றிதழ்களை திருப்பித் தர, கல்லூரி நிர்வாகம் 8 லட்சம் ரூபாய் கேட்பதாக, மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். கல்லூரியில், மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதால், தனது மகன் அங்கு படிக்க விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார். தனது மகனின் சான்றிதழ்கள் மறுக்கப்படுவது குறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழக பதிவாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மனோஜ் குமாரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story