"எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புறக்கணிப்பு ஏன்?" - மு.க. ஸ்டாலின் விளக்கம்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், அவருக்கு புகழ் சேர்க்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் நாளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 ம் ஆண்டிலேயே கொண்டாட வேண்டிய விழாவை மறந்து விட்ட அதிமுக,இப்போது, அரசியல் காரணங்களுக்காக கடைசியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கையில் எடுத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.அரசு விழா என்ற பெயரில், கட்சி அரசியலுக்காகவும், லாப நோக்கத்துடனும் எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் மாச்சரியங் களுக்கு அப்பாற்பட்டது கருணாநிதி - எம்ஜிஆர் நட்பு என நினைவு கூர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், நாளைய விழாவில் எம்ஜிஆருக்கு புகழ் சேருங்கள் - மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story