அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மலை கிராம மக்கள்..
ஒசூர் அருகே மலை கிராம மக்கள் சாலை, பேருந்து வசதி இல்லாமல், பல ஆண்டுகளாக ஆபத்தான முறையில் காட்டுவழி பயணம் மேற்கொள்கின்றனர்
தொளுவபெட்டா மலை கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பே கிராமத்தின் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக சாலை, பேருந்து, மருத்துவமனை உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாததால், ஆபத்தான முறையில் காட்டுவழி பயணம் மேற்கொள்வதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
Next Story