சிவனாண்டிக்கு எதிரான பண மோசடி வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டிக்கு எதிரான பண மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டிக்கு எதிரான பண மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.ஓய்வுபெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டிக்கு எதிரான சுமார் 50 லட்சம் ரூபாய் பண மோசடி வழக்கில் அவருக்கு தொடர்பில்லை என்று கூறி விடுவித்து மற்றவர்களுக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.சிவனாண்டி குற்றவாளி என்று சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிவனாண்டி தொடர்ந்த முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
Next Story