இடைத்தேர்தல்கள் எப்போது அறிவித்தாலும் நடத்த தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர்
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும், நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த 9 மாவட்ட ஆட்சியர்களுடன் திருச்சியில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்தியபிரதா சாஹூ, தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி பேரில் 5 புள்ளி 82 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களை அதிகளவு வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும், நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story