600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோயில்
ஈரோடு மாவட்டத்தின் பழமையான கோயில்கள் வரிசையில் தனித்துவம் பெற்று பக்தர்களால் கொண்டாடப்படும் வேணுகோபால சுவாமியின் பெருமைகள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையில் இருக்கிறது பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோயில். சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இது என்பது சிறப்பு.
கோயிலின் முன் பகுதியில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர், 80 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதேபோல் கோயிலின் முதல் பிரகாரத்தின் முன் பகுதியில் 60 அடி உயரமுள்ள கொடிகம்பமும், 108 கால் மண்டபமும் கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரங்கய்யா என்ற தெலுங்கு பிராமணர், இந்த பகுதியில் வரி வசூலித்து திப்பு சுல்தானுக்கு அதை வழங்கி வந்துள்ளார். ஆனால் 3 ஆண்டுகளாக வசூலித்த வரிப்பணத்தை திப்பு சுல்தானுக்கு கொடுக்காமல் அதைக் கொண்டு 108 கால் மண்டபத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
Next Story