"தீபாவளிக்கு 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தீபாவளியையொட்டி 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தீபாவளியையொட்டி 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் வருகிற நவம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த பேருந்துகள், கோயம்பேடு, அண்ணாநகர், அடையாறு, தாம்பரம், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் . இதுபோல, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு இடையே தீபாவளியையொட்டி 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Next Story