மதுரை இளைய ஆதீன பொறுப்புக்கு நித்யானந்தா, எந்தக் காலமும் வரமுடியாது - மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜி.ஜெயச்சந்திரன்

மதுரை இளைய ஆதீன பொறுப்புக்கு நித்யானந்தா, எந்தக் காலமும் வரமுடியாது என்றும், ஆதீனத்திற்குள் நுழைய முயற்சித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மதுரை இளைய ஆதீன பொறுப்புக்கு நித்யானந்தா, எந்தக் காலமும் வரமுடியாது - மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜி.ஜெயச்சந்திரன்
x
* மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜி.ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள  அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நித்யானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

* இது செல்லாது என நித்யானந்தா, மதுரை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளதாகவும்,
அதேநேரம், இந்துசமய அறநிலையத்துறை, நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கும், அவருக்கு எதிராக பெற்ற தடை உத்தரவும் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நித்யானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழையவோ, 293வது ஆதீனமாக தொடரவோ சட்டப்படி முகாந்திரத்தை ஏற்படுத்தவில்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* நித்யானந்தா மீதான எந்தத் தடையையும் உயர்நீதிமன்றம் நீக்கவில்லை என்றும், மதுரை ஆதீன நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத சிலரால் கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி முடித்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

* மதுரை ஆதீனம் நித்யானந்தாவை ஒருபோதும் அதன் நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்காது என்றும்,அவர் அந்தப் பொறுப்புக்கு எந்தக் காலமும் வரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* நித்யானந்தா, மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முயற்சித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வழக்கறிஞர் ஜி.ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்