சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணி : நிலஅளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

சேலம் விமான நிலைய விரிவாக்கப்பணிக்கு நில ஆர்ஜிதம் செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பான நிலை உருவானது.
சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணி : நிலஅளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
x
சேலம், காமலாபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 165 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததை அடுத்து நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்றுள்ளனர். 25 ஆண்டுகால விசாரணைக்கு பின் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இழப்பீட்டை அரசு வழங்கவில்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 570 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணிகளுக்காக தனி வட்டாட்சியர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்களை நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்