தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு அரசு வேலை: ஆணையை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது பற்றியும் கல்வித் தகுதி குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் பலியான 10 பேரின் குடும்பங்களில் இருந்து தலா ஒருவரும், காயமடைந்தவர்களின் ஊனமுற்ற 9 பேரும் அரசு வேலை வழங்க தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்கள் 19 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
Next Story