நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை தொடர அனுமதி
சென்னை நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ஒப்பந்த பணிகளை தொடர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* இதுதொடர்பாக பிரான்ஸை சேர்ந்த சூயஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி பாரதிராஜன் முன் விசாரணைக்கு வந்தது.
* ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்கனவே திறந்து விட்டதால், அதற்கு தடை விதிக்க கூடாது என்றும், தற்போது புதிய நிறுவனம் ஒன்றும் இந்த டெண்டரில் கலந்து கொள்ள தகுதி இருப்பதை கண்டறிந்து, அந்த நிறுவனத்தை சேர்த்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டென்டர் நடவடிக்கைகளை தொடரவும், முடிவுகளை அறிவிக்கவும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அனுமதியளித்து, வழக்கை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story