இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு...

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முபாரக்கின் நீதிமன்ற காவலை, 90 நாட்கள் நீட்டித்து என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு...
x
* கோவை, இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை தொடர்பான, வழக்கில் காவல் நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி விமலா, நீதிபதி ராமதிலகம் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, எந்த காரணத்தையும் கூறாமல் என்.ஐ.ஏ. தரப்பில் அளித்த அறிக்கையை ஏற்று, ஒரேயடியாக 90 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, முபாரக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், முபாரக்கின் நீதிமன்ற காவல் உத்தரவை ரத்து செய்து நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 

* 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும் எனவும் நிபந்தனை விதித்​தனர். தனி நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும், பாஸ்போர்ட்டை தனி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்