"புதுக்கோட்டையில் போட்டியிட தயாரா..?" டி.டி.வி. தினகரனுக்கு, விஜயபாஸ்கர் சவால்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர், டிடிவி தினகரன் என்றார்.
டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல என்றும், அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி என்றும் விஜயபாஸ்கர் விமர்சித்தார்.
10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயலுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி - டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள் என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப் பட்டதற்கு பொறுப்பேற்று, மு.க. ஸ்டாலின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் இருந்தே விலக வேண்டும் என்றும் டாக்டர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.
Next Story