23 ஆண்டுகளில் 194 துப்புரவு தொழிலாளர்கள் மரணம் - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில், கடந்த 23 ஆண்டுகளில், 194 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை, தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. 20 மாநிலங்களின் தகவல்கள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலின்படி, தமிழகத்தில் தான் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது, தமிழகத்தில், 194 பேரும், குஜராத்தில், 122 பேரும், உத்தர பிரதேசத்தில் 64 பேரும், ஹரியானாவில் 56 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, 2013-ம் ஆண்டு 20 பேரும், 2004, 2012-ம் ஆண்டுகளில் 17 பேரும், 2014-ல் 15 பேரும், 2011-ம் ஆண்டு 14 பேரும் இறந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் 2006, 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் தலா 12 பேரும் உயிரிழந்துள்ளதாக, தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story