கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை...

வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை...
x
கடந்த 2000ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி, ஈரோடு  மாவட்டம் சாலவாடி அருகே தனது பண்ணை வீட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் கடத்திச் சென்றனர். 108 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின், ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் தலைமறைவாகயுள்ளார். எஞ்சிய கோவிந்தராஜ், ஏழுமலை, சத்யா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாறன் ஆகிய 9 பேரையும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.  சுமார் 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி மணி தீர்ப்பு வழங்கினார். ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததாலும் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். 


பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை - பேராசிரியர் கல்யாணி

நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றியும், தூதுவர்களாக சென்ற தங்கள் மீதே வழக்கு போடப்பட்டதாகவும் பேராசிரியர் கல்யாணி தெரிவித்தார்.


நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை - மூத்த பத்திரிகையாளர் கோபால் கருத்து


"நடிகர் ராஜ்குமார் வழக்கு : காலம் கடந்த நீதி - சுகுமாரன், மனித உரிமை செயல்பாட்டாளர்"

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், காலம் கடந்த நீதியால் பயனில்லை என அப்போது தூதுவராக செயல்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர் சுகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.





Next Story

மேலும் செய்திகள்