தனிநபர் விபத்து பாலிசி தொகை ரூ.15 லட்சமாக உயர்வு - காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தகவல்

வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது.
தனிநபர் விபத்து பாலிசி தொகை ரூ.15 லட்சமாக உயர்வு - காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தகவல்
x
கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாயும், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாயும், இழப்பீடு தொகையை, அவரின் வாரிசுகள் பெறலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இந்தத் திட்டம் 2002 ஆகஸ்ட் மாதம் முதல் அமலில் உள்ளது.இந்த நிலையில் வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது. 

இதற்காக வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு 750 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும்.அதிகரிக்கும் மருத்துவ சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், கட்டாய தனிநபர் விபத்து பாலிசி தொகையை, 15 லட்சத்துக்கும் குறையாமல் உயர்த்த வேண்டும் எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்