இல்லாத மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டதா..? அதிகாரியை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்

இல்லாத மின்மோட்டாரை சரிசெய்து, அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இல்லாத மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டதா..? அதிகாரியை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்
x
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மேல்மாம்பட்டு கிராமம். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கடந்த 6 மாதமாக மின்மோட்டார் பழுதாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
இதனை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த பதில் கடிதம், அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம், பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய ஊழியர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். 

தற்போது, மின்மோட்டரே இல்லாத நிலையில், அதனை சரிசெய்து குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக அந்த கடிதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைவில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததை தொடர்ந்து, அவரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் மேல்மாம்பட்டு கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்