சேலம் கோட்டை ஸ்ரீஅழகிரி நாத சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்...

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீஅழகிரி நாத சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்.
சேலம் கோட்டை ஸ்ரீஅழகிரி நாத சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்...
x
* சேலத்தின் பெருமைகளில் பிரதானமான ஒரு இடத்தை தனக்கென தக்க வைத்திருக்கிறார் கோட்டை அழகிரி நாத சுவாமி... நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்கிறது வரலாறு. 

* நான்கு திசைகளிலும் மலைகள் சூழ்ந்த காரணத்தால் சைலம் என்பதே மருவி சேலம் என்று உருமாறியதாக கூறப்படுகிறது. மலைகள் சூழ்ந்த சேலத்தில் மேற்கு புறமாக உள்ள கோட்டையில் அழகிய திருமேனியோடு காட்சி தருகிறார் அழகிரி நாத சுவாமி.

* இங்கு வந்து சுவாமியை வழிபட்டால் திருமண தடை நீங்கி நற்பேறு கைகூடும் என்கிறார்கள் கோயிலின் வரலாறு அறிந்தவர்கள்... மூவேந்தர்களும் வழிபட்ட தலம் இது என்பதும் கோயிலின் பிரசித்தம்... 

* ஸ்ரீரங்கத்தை போலவே 7 பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி, ராமர் சன்னிதிகள் உள்ளன. கோயிலின் கொடிமரத்திற்கு முன்பாக கருடன் மற்றும் ஆஞ்சநேயருக்கு பிரம்மாண்டமாக தனி சன்னிதி உள்ளது இந்த கோயிலின் சிறப்பு. அழகிரி நாதனின் அழகிய தோற்றத்தில் மயங்கிய அனுமனும் ராமனும் கொடிமரத்தடியில் இருகரம் கூப்பி கம்பீரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 

* கோயிலின் சிறப்பாக கண்ணாடி மாளிகையும் இங்கு உள்ளது. சொர்க்கவாசல் திறப்பின் போது மட்டுமே இந்த அறைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். புரட்டாசி மாதம் முழுவதும் இங்கு விழாக் கோலம் தான். குறிப்பாக சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். மார்கழி மாதம் நடக்கும் பகல் பத்து, இராப்பத்து நிகழ்வில் கலந்து கொள்ள பல மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் இங்கு வருவார்கள்.

* தன்னை நாடி நம்பிக்கையோடு வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அவர்கள் வாழ்வு சிறக்க பேருதவி புரிகிறார் அழகிரி நாத பெருமாள்.


Next Story

மேலும் செய்திகள்