மலையோடு மலையாக காட்சி தரும் தான்தோன்றி பெருமாளின் சிறப்புகள்
கரூர் அருகே மலையோடு மலையாக காட்சி தரும் தான்தோன்றி பெருமாளின் சிறப்புகள்
* கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் இருக்கிறது தான்தோன்றி மலை... ஊரின் பெயராலேயே இங்கு வீற்றிருக்கும் பெருமாள் அழைக்கப்படுகிறார்.
* ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் நடந்த போட்டியின் போது சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதி தான் தான்தோன்றி மலையாக உருவெடுத்தது என்கிறது வரலாறு.
* பெருமாளின் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஷர்மா என்ற பக்தர் திருப்பதிக்கு செல்ல முடியாமல் வருந்தி வந்துள்ளார். அப்போது அவரின் கனவில் தோன்றிய பெருமாள், உன் வீட்டின் அருகே உள்ள ஒரு மலையில் இருக்கிறேன். நீ கிளம்பி வா என கூறியுள்ளார். பெருமாளின் உத்தரவை ஏற்று மலைக்கு சென்ற ஷர்மா, அங்கு பாறையை பிளந்து கொண்டு காட்சி தந்த பெருமாளை வணங்கியுள்ளார். தன் பக்தனுக்கு காட்சி தந்த பெருமாள் இங்கு வந்தது இப்படித்தான் என்கிறது கோயில் வரலாறு.
* சுயம்புவாக காட்சி தரும் பெருமாளை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கிச் சென்றால் நினைத்தது கைகூடுமாம்.. இந்த கோயிலின் மற்றொரு விசேஷம் பெருமாள் , இங்கு மேற்கு நோக்கி காட்சி தருவது தான்...
* 300 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் இது... திருமண தடையை நீக்கும் வல்லமை இங்குள்ள சுவாமிக்கு உண்டு என்பதால் நாள்தோறும் இங்கு வரும் பக்தர்கள் அதிகம்.. அதேபோல் தோல் நோய்கள் நீங்க இங்கு உப்பு வாங்கி வந்து மனமுருக பெருமாளை வேண்டிக் கொண்டு சாற்றினால் நோய்கள் நீங்கி நன்மை கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
* மூலவரான கல்யாண வெங்கட்ராமனுக்கு விசேஷ நாட்களின் போது நடக்கும் அபிஷேகமும், ஆராதனைகளும் கண்கொள்ளா காட்சிகள் தான்.
* கரூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலில் உள்ள பெருமாளுக்கு தினமும் திருமஞ்சன நிகழ்வு நடப்பதும் பிரசித்தம்... வேண்டும் வரங்களை அள்ளித் தரும் வள்ளலாக மலை மீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் தான்தோன்றி பெருமாள்.
Next Story