ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
x
ராஜீவ் கொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

7 பேர் விடுதலை விவகாரத்தில், 2014-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து, பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாகவும், சமீபத்தில் கூட தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நகலையும், பிற ஆவணங்களையும் மூன்று வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி, நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்