காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்தும் அரசு கோப்புகளை திருப்பி அனுப்பினார் கிரண் பேடி
புதுச்சேரியில், காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காவல்நிலையங்களில், காலியாக 309 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டது. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 22 எனவும், ஓ.பி.சி பிரிவினருக்கு 25 எனவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 27 எனவும் அரசு நிர்ணயித்தது. இந்தநிலையில், பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை 24-ஆக தளர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, வயது வரம்பை தளர்த்தும் முடிவுக்கு அனுமதி பெறும் விதமாக அதுகுறித்த கோப்புகள் அரசு சார்பில் ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அந்தக் கோப்புகளை கிரண்பேடி திருப்பி அனுப்பினார். காவலர் பணியிடங்களுக்கான வயது வரம்பில் பழைய நிலையே நீடிக்க வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசுக்கு பதில் அனுப்பியுள்ளதாக புதுச்சேரி தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story