வைகை அணையில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

தேனி மாவட்டம் வைகை அணையில் இரண்டு கரைகளை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் உயர்மட்ட பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணையில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது
x
கடந்த மாதம் வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் இரண்டு கரை பகுதிகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாகவே பாலத்தின் வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில வாரங்களாக வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்கா பகுதிகளை முழுமையாக சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனிடையே, இரு கரைகளை இணைக்கும் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்