சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கைதிகள்... வேறு சிறைகளுக்கு மாற்றம் - சிறைத்துறை நடவடிக்கை
புழல் சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, புழல் சிறையில் இருந்த தண்டனை கைதிகள், சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்கள் வெளியாயின. இதனையடுத்து கைதி முகமது ரபிக் கோவை சிறையிலும், முகமது இப்ராகிம் சேலத்திற்கும், முகமது ரியாஸ் பாளையங்கோட்டைக்கும், முகமது ஜாகீர் - வேலூர் சிறைக்கும், ரபீக் திருச்சி சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சிறைத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Next Story