கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் நீராவி வால்வில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதன் மூலம் 45 நாட்களுக்கு பிறகு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
* ஆகஸ்ட் மாதத்தில் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் நீராவி வெளியேற்றும் குழாயில் உள்ள வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 950 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பழுது சீரமைக்கப்பட்டு மீண்டும் துவங்கி, முதல் கட்டமாக 300 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது.
* படிப்படியாக மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டு 3 தினங்களில் மீண்டும் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக முதல் அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது.
Next Story