தாய்க்கு அறிவுரை வழங்கிய பிரபலமான குழந்தை - ஸ்மித்திகா குடும்பத்தினரிடம் சிறப்பு பேட்டி
தாய்க்கு அறிவுரை வழங்கி சமூக வலைத்தளத்தில் பிரபலமான குழந்தை ஸ்மித்திக்கா குறித்து தற்போது காணலாம்..
கடந்த ஒரு வாரமாக யார், எங்கு பார்த்தாலும், கூறும் ஒரே வசனம்.. திட்டாம, அடிக்காம, வாயில குணமா சொல்லனும்... இது எதோ படித்தின் வசனம் அல்ல.. குழந்தை ஸ்மித்திக்கா தனது தாயிடம் கூறிய அறிவுரை தான் இது..
திருப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், பிரவினா, தம்பதியினருக்கு பிறந்த குழந்தை ஸ்மித்திக்கா, எல்.கே.ஜி. படிக்கும் ஸ்மித்திக்கா, நடனம், ஓவியம் என சிறு வயதிலே ஆர்வம் காட்டி வரும் சுட்டிக்குழந்தை ஆவார்..
தாய்க்கு ஏன் ஸ்மித்திக்கா அறிவுரை வழங்கினார். ?
கடந்த வாரம் பள்ளிக்கு சென்று ஸ்மித்திகா பிஸ்கெட்களை சாப்பிடாமல் திருப்பிக்கொண்டுவந்துள்ளார். இது குறித்து அப்பா கேட்டதற்கு, அப்பாவை ஸ்மித்திக்கா அடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த தாய் பிரவினா, ஸ்மித்திக்காவை கண்டித்துள்ளார். அப்போது தான், அந்த சுட்டிக் குழந்தை பெரியவர்கள் போல், மழலை மொழி மற்றும் பாவனையில் அடிக்காம குணமா சொல்ல வேண்டும் என்று கூறியது.
தனது மகளின் இந்த செயல் ரசிக்கும் வகையில் இருந்ததால், இதனை வீடியோ எடுத்தாதகவும். இது பெரும் வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் தாய் பிரவீனா..
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ள ஸ்மித்திக்கா, தற்கால குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு...
Next Story