நெல்லை : இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு..!
நெல்லையில் பெட்ரோல் பங்கில் இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட போது திடீரென்று தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆல்வின், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடச் சென்றுள்ளார். பெட்ரோல் போடும் போது ஆல்வின் மீதும், வாகனத்திலும் பெட்ரோல் சிந்தியுள்ளது. இந்த நிலையில், இருச்சக்கர வாகனத்தை ஆல்வின் இயக்கிய போது திடீரென்று தீப்பற்றியது. இதனையடுத்து, தீயணைக்கும் கருவிகளின் மூலம் பங்க் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆல்வின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆல்வினின் வாகனமும் தீயின் கருகியது. பெட்ரோல் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.
Next Story