கற்பக விநாயகர் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த தீர்த்தவாரி உற்சவம்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பழமையான குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா, கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சதுர்த்தி நாளான இன்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் குளக்கரையில் நடைபெற்றது. அங்கு எழுந்தருளிய அங்கு சத்தேவருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, அங்கு சத்தேவர் மூன்று முறை குளத்தில் மூழ்கி எழுந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகருக்கு பிரமாண்ட கொழுக்கட்டை படையல்:
இன்று பிற்பகல், 18 படியில் பச்சரிசி, வெல்லம், கடலை பருப்பு, பாசிப் பருப்பு, எள் ஆகியவற்றால் தயாரான பிரமாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளது.
Next Story