நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று விநாயகரை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து வழிபடுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் நேற்று மாலை முதலே மக்கள் கடைகளுக்கு சென்று பூஜை பொருட்கள் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர்.
விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்து கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
கற்பகவிநாயகர் ஆலய சதுர்த்தி தேரோட்டம்:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், தினமும் விநாயகரின் பல்வேறு வீதி உலா நடைபெற்று வந்தது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகரை தரிக்க அதிகாலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சௌகர்பேட்டை தங்க சாலை உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 4 அடி முதல் 10அடிவரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு அலங்காரங்கள், வண்ண விளக்குகளுடன் ஜோலித்த விநாயகரை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பஞ்சமுக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 14 அடி
உயரத்துடன் தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிலை கொண்ட இந்த கோவிலில் விநாயகர் 5 முகங்களுடன் சிங்க வாகனத்தில் காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரத்து எட்டு சங்காபிஷேங்கள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனர்.
Next Story