பழங்கால கல்வெட்டுகளை மீட்கும் பணியில் இளைஞர்கள்...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்கால கல்வெட்டுகளை மீட்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
பழங்கால கல்வெட்டுகளை மீட்கும் பணியில் இளைஞர்கள்...
x
விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் கிராமத்தில் உள்ள அபிராமேஸ்வரர் கோயில் பல நூற்றாண்டுகளை கடந்தது என்ற அடையாளத்துடன் இருக்கிறது. முதலாம் பராந்தக சோழர் ஆட்சி காலத்தின் போது கற்கோவிலாக மாற்றப்பட்ட இந்த கோயிலின் சுவற்றில் 106 கல்வெட்டுகள் உள்ளன. 

இந்த கல்வெட்டுகளில் எல்லாம் ராஜராஜசோழன், முதலாம் மற்றும் 2ஆம் குலோத்துங்கன், பாண்டிய மன்னர்கள் உள்ளிட்டோரின் கால குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் காலப்போக்கில் இந்த கல்வெட்டுகள் மீது வண்ணங்கள் பூசியதால் அதன் தோற்றமே மறைந்து போய் காணப்பட்டது. 

இந்த நிலையில் தான் கோயிலின் பழமையை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது இளைஞர்கள் குழு. அதன்படி விழுப்புரத்தை சுற்றியுள்ள கரிகால சோழன் பசுமை மீட்பு படை, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் களம் இறங்கினர். 
கோயிலின் பழமை மாறாமல் அதன் தொன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய இளைஞர் குழு அதனை திறம்பட செய்திருக்கிறது. 

தொல்லியல் துறையின் அனுமதி பெற்று கல்வெட்டில் இருந்த வண்ணங்களை அழித்த அந்த குழு, கல்வெட்டு எழுத்துகள் மக்கள் பார்வைக்கு தெரியும் படி செய்தது. இதனால் கோயிலின் வரலாறுகள் உள்ளிட்டவை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும் என இவர்கள் நம்புகிறார்கள்....

விழுப்புரம் மாவட்டத்தில் இதனை முன்னெடுத்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழகம் தாண்டி இந்தியாவில் உள்ள கோயில்களின் வரலாற்றை உலகறிய செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. தொல்லியல் துறையும் இவர்களுக்கு உதவ முன்வந்தால் வரலாறு நிச்சயம் அடுத்த தலைமுறையை சென்றடையும்...

Next Story

மேலும் செய்திகள்