'டெஸ்ட் டியூப்' மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதி

நடிகை ரேவதி, சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதி
x
* 1981-ம் ஆண்டில்,பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், ரேவதி...  மகளிர் மட்டும், கன்னி ராசி, மவுன ராகம், அவதாரம், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்த ரேவதி  நடிகையாக 1 முறையும், இயக்குனராக 2 முறையும் தேசிய விருது வாங்கியுள்ளார்.

* புதிய முகம் என்ற திரைப்படத்தில் நடித்த போது, அதில் நடித்த சுரேஷ் மேனனுடன் காதல் வயப்பட்டு, 1988-ல் அவரையே திருமணம் செய்துகொண்டார், ரேவதி.

* இவர்களின் திருமண வாழ்க்கை 14 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2002-ம்  ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, ரேவதி தனியாகவே வசித்து வந்தார். 

* இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெண் குழந்தை ஒன்றை ரேவதி வளர்த்து வருகிறார். அந்தக் குழந்தையை ரேவதி தத்தெடுத்துள்ளதாக வதந்திகள் பரவின. குழந்தை குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்த ரேவதி, தற்போது மவுனம் கலைத்துள்ளார். அந்தக் குழந்தை தனது குழந்தை தான் என கூறியுள்ளார்.

* கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த தனக்கு, யாரும் இல்லை என வருந்தியதால், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர், அதாவது தனது 47 வயதில் சோதனைக் குழாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்த ரேவதி, குழந்தைக்கு மஹி என பெயர் சூட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்