வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை - 200 சவரன் நகை, ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்
கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 200 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த பாபு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடலூரில் உள்ள அவரது வீட்டில் பிற்பகலில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது.சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 35 லட்ச ரூபாய் பணம், 200 சவரன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் 45 வங்கி கணக்கு புத்தகங்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம் வாங்கியது தொடர்பான 505 பத்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பாபுவுக்கு 6 வங்கிகளில் லாக்கர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இன்று அவரது லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்துத்துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story