வெளி மாநிலங்களில் இருந்து சத்துணவு முட்டைகள் கொள்முதல் செய்யாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

சத்துணவு முட்டை கொள்முதல் செய்வது தொடர்பான அரசாணையில் வெளிமாநில கோழிபண்ணைகள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்க தமிழக தடை விதித்திருந்தது.
வெளி மாநிலங்களில் இருந்து சத்துணவு முட்டைகள் கொள்முதல் செய்யாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்
x
சத்துணவு முட்டை கொள்முதல் செய்வது தொடர்பான அரசாணையில் வெளிமாநில கோழிபண்ணைகள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்க தமிழக தடை விதித்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பதில் அளித்த தமிழக அரசு, அடையாளம் தெரியாத வெளிமாநில கோழிப்பண்ணைகளிலிருந்து பதப்படுத்தப்படாத முட்டைகளை அனுமதித்தால் அது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது. மேலும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்காத மாநிலமான தமிழகத்தில் இருந்து மட்டும் முட்டைகள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மாநில அளவிலான டென்டர் முறை என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் விளக்கம் அரசு அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்