காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரிக்கை - பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் மனு

காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரிக்கை - பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் மனு
x
* தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்.பி., தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஐஜி-க்கு எதிராக புகார் அளித்தார். 

* இதனை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரித்து வருகிறது. 

* இந்நிலையில், இந்த குழுவை மாற்றியமைக்க கோரியும், 

* சம்பந்தப்பட்ட ஐஜியை பணி மாற்றம் செய்து,  குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

* இந்த மனு நீதிபதி சத்ருகனா புஜாரி முன் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது, ஐஜி தொடர்ந்து அந்த பதவியில் நீடித்தால் சாட்சிகளை கலைக்க கூடும் எனவும் 

* இந்த வழக்கில் விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் பெண் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது. 

* இதை ஏற்ற நீதிபதி, விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்