"தமிழக அரசு, சிறப்பாக செயல்படுகிறது - இந்தியாவிற்கு, பொருளாதார ரீதியில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது" - என்.கே.சிங்

தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து, அக்டோபர் மாத இறுதிக்குள், அறிக்கை வழங்க உள்ளதாக 15 வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, சிறப்பாக செயல்படுகிறது - இந்தியாவிற்கு, பொருளாதார ரீதியில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது - என்.கே.சிங்
x
சென்னை தலைமைசெயலகத்தில் , செய்தியாளர்களை சந்தித்த அவர், 15 வது நிதிக்குழு கூட்டத்தில், தமிழக அரசு அதிகாரிகள், மிகச் சிறப்பாக கருத்தகளை விளக்கியதாக கூறினார். 

* தமிழக அரசு, சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலமாக திகழ்வதாகவும், இந்தியாவிற்கு, பொருளாதார ரீதியாக முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

* தமிழகம், மிக வேகமாக நகரமயமாகி வருவதாக குறிப்பிட்ட அவர், சென்னை போன்ற நகரங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீ்ர், மழை, வெள்ளம் வெளியேற்றுவதற்கான திட்டம் போன்றவற்றை உருவாக்க வேண்டி உள்ளதாக கூறினார். 

* தமிழகத்தில், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட நிலையில், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குடியேறுவோர் எண்ணிக்கை அதிகிரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

* தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து, அக்டோபர் இறுதக்குள் அறிக்கையை வழங்குவோம் என்றும் நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்