தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை - என்.கே.சிங்
தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை வழங்க உள்ளதாக 15 வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைசெயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர் 15 வது நிதிக்குழு கூட்டத்தில், தமிழக அரசு அதிகாரிகள், மிகச் சிறப்பாக கருத்துக்களை விளக்கியதாக கூறினார். தமிழக அரசு, சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலமாக திகழ்வதாகவும், இந்தியாவிற்கு, பொருளாதார ரீதியாக முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகம், மிக வேகமாக நகரமயமாகி வருவதாக குறிப்பிட்ட அவர், சென்னை போன்ற நகரங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீ்ர், மழை, வெள்ளம் வெளியேற்றுவதற்கான திட்டம் போன்றவற்றை உருவாக்க வேண்டி உள்ளதாக கூறினார். தமிழகத்தில், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட நிலையில், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குடியேறுவோர் எண்ணிக்கை அதிகிரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து, அக்டோபர் இறுதக்குள் அறிக்கையை வழங்குவோம் என்றும் நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
Next Story