இதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை
இதயத் தமனி வெடித்தல் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ரத்தக் குழாய் பொருத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
'ஆர்டிக் அனிர்ஸம்' எனப்படும் இதய பெருந்தமனி வெடித்தல் நோய், மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஒரு நோயாக பார்க்கப்படுகிறது. இந்த நோயால் இதயத்தில் உள்ள தமணிகளில் உடைப்புகள் ஏற்படும். இதனை குணப்படுவது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நோயால் பாதிக்கப்பட்ட, சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெயராமையா என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம், செயற்கை ரத்தக் குழாய்யைப் பொருத்தி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Next Story