பார்வைக் குறைபாடுடைய மாணவியின் திறமை - மாணவி கவிப்பிரியாவிற்கு குவியும் பாராட்டு

தமிழ் இலக்கியங்களை ஒப்புவிக்க திட்டம்
பார்வைக் குறைபாடுடைய மாணவியின் திறமை - மாணவி கவிப்பிரியாவிற்கு குவியும் பாராட்டு
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே பார்வைக் குறைபாடு கொண்ட இவர், மற்றவர்களின் துணையுடன் தான் பள்ளிக்கு வந்து செல்கிறார்... 
படிப்பு மட்டுமல்ல, தனித் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும், கவிப்பிரியா ஆர்வம் காட்டினார். இதன் விளைவாக, தமது தோழியின் உதவியுடன், திருக்குறளை காதால் கேட்டு மனப்பாடம் செய்தார். அதனை விளக்கத்துடன் கூறி, அசத்தியும் வருகிறார். 

பார்வைக் குறைபாடுடைய தம்மை, அனைவரும் சம மாக பாவிப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கவிப்பிரியா, ஐ.ஏ.எஸ். ஆகப் போவதாக தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற கவிப்பிரியாவை, பள்ளியின் தலைமை ஆசிரியை தாமே நேரில் சென்று அழைத்து வந்து, 11ஆம் வகுப்பு படிக்க வைத்துள்ளார். 

பார்வைக் குறைபாட்டால் முடங்கி விடாமல், படிப்பு மட்டுமின்றி, தனித் திறன்களையும் வளர்த்துக்கொள்ள பேரார்வம் கொண்டுள்ள கவிப்பிரியாவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்