சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்...
வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயத்தில் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநாட்டு பறவைகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆர்க்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிர் மற்றும் உணவுக்காக பறவைகள் வலசை செல்வது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதத்தில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் சொந்த நாட்டிற்கு திரும்புவது வழக்கம். அந்த வகையில், கோடியக்கரை சரணாலயத்தில் அக்டோபர் சீசன் தொடங்குவதற்கு முன்பே, வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. செங்கால் நாரை, துடுப்பு மூக்கு நாரை, பூநாரை, கூழைக்கிடா போன்ற பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன.
Next Story