தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்..!
தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
சேலம் :
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் கிச்சிபாளையம் பகுதியில், நீலாயதாட்சி அம்மன் குலாளர் மாதர் சங்கம் மற்றும் பாவயாமி குழுவினர் சார்பில் 40-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அலங்காரம் செய்யப்பட்ட கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் குழந்தைகளின் நடன நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் யாதவ மேட்டு ராஜக்காப்பட்டி கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக வான வேடிக்கைகளும், உறியடி போட்டியும் நடைபெற்றது.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணன் ராதா வேடங்கள் அணிந்த சிறு குழந்தைகளின் ஊர்வலமும் நடைபெற்றது.
மாமல்லபுரம் :
மாமல்லபுரம் நவநீதகிருஷ்ணன் கோவிலில் பத்து நாள் உறியடி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆலிலைக் கண்ணன் திருக்கோலத்தில் கிருஷ்ணன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Next Story