கட்டாய ஹெல்மெட் உத்தரவு - மக்களின் கருத்து என்ன ?
இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு குறித்து, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தந்தி டிவி நடத்திய கள ஆய்வு முடிவுகள்.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு குறித்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் தந்தி டிவி கருத்து கேட்டது. அதில், கட்டாய ஹெல்மெட் குறித்த அரசின் உத்தரவு ஏற்புடையது என 41 சதவீதம் பேரும் ஏற்புடையதல்ல என 59 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவித்த பெண்களில், 41 சதவீதம் பேர் அரசின் உத்தரவை ஏற்பதாகவும், 59 சதவீதம் பேர் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோல, கருத்து தெரிவித்த ஆண்களில், 41 சதவீதம் பேர், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோருக்கு ஹெல்மெட் அவசியம் என 41 சதவீதம் பேரும், அவசியமில்லை என 59 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
உத்தரவை ஏற்காததன் காரணம் என்ன என்ற கேள்விக்கு, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டிய தேவை இல்லை என 24 சதவீதம் பேரும், பின் இருக்கையில் ஹெல்மெட் அணிந்து பயணிப்பது சிரமமாக உள்ளது என 67 சதவீதம் பேரும், பயணத்திற்கு பிறகு ஹெல்மெட்டை எடுத்துச் செல்வது கடினமாக உள்ளதாக 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்தரவு குறித்து, காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்ற கேள்விக்கு ஆம் என 95 சதவீதம் பேரும், இல்லை என ஐந்து சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர். இதுபோல, பல்வேறு இலவச பொருட்களை வழங்கும் அரசு, ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் ஹெல்மெட்டை கட்டாயமாக்கும் முன், சாலைகளை தரம் உயர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்
ஏற்புடையது - 41%
ஏற்புடையதல்ல - 59%
பெண்களின் கருத்து
ஏற்புடையது - 41%
ஏற்புடையதல்ல - 59 %
ஆண்களின் கருத்து
அவசியம் - 41%
அவசியமில்லை - 59%
அரசின் உத்தரவை எதிர்ப்பதற்கான காரணம்
பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணிய தேவை இல்லை - 24%
பின் இருக்கையில் ஹெல்மெட் அணிந்து பயணிப்பது சிரமமாக உள்ளது - 67%
பயணத்திற்கு பிறகு எடுத்துச் செல்வது கடினமாக உள்ளது - 9%
ஹெல்மெட் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா?
ஆம் - 95%
இல்லை - 5%
பெரும்பாலான மக்களின் கருத்துகள்
* அரசே ஹெல்மெட்டை இலவசமாக வழங்க வேண்டும்
* ஹெல்மெட்டை கட்டாயமாக்குவதற்கு முன்னால், சாலைகளை தரம் உயர்த்த வேண்டும்
* ஹெல்மெட் அணிவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்
Next Story